அன்றாடம் பார்ப்பதை, கேட்பதை நினைவுகூரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
படிப்பின் அவசியத்தை உணர்த்தும், ‘பாரம் குறைந்தது’ கதை படிக்காத பெற்றோருக்கு விழிப்புணர்வை ஊட்டுகிறது. ரேஷன் கடைகளில் நடக்கும் கள்ளச்சந்தை வியாபாரம் பசியால் வாடிய மூதாட்டி மரணத்தை, அரிசி கதை வலியுடன் பகிர்கிறது.
இறப்பு வீட்டில், ஏதாவது பேச வேண்டுமென அறிவுரை மட்டும் சொல்லும் உறவுகளின் செயல்களை, ‘இல்லறத்துறவி’ கதை பேச வைக்கிறது. சைக்கிள் கடைக்காரரின் தொழில் நலிவை பேசும் சைக்கிள் கதை, மனித மனதின் கோரமுகத்தைக் காட்டுகிறது.
நடப்பு வாழ்வை பேசும் கதை தொகுப்பு நுால்.
– டி.எஸ்.ராயன்