அகஸ்தியர் சித்த வைத்தியத்தை பரிபாஷையாக கூறிய, 300 பாடல்கள் உடைய நுால். பாடல்கள் மறைபொருளாக நோய், வைத்தியம் பற்றி சொல்கிறது. அனுபவ பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது.
சித்தர்கள் கருத்துகளை மறைபொருளாகப் பல்வேறு அரிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளதை குறிப்பிடுகிறது. பூமியில் கிழங்கை எடுத்து பதப்படுத்தும் முறையை மூன்றாம் பகுதியில் சொல்கிறது. பூநீறை பயிர் செய்ய அடுத்து விளக்கப்படுகிறது.
செந்துாரம், மெழுகு தயாரிப்பையும் விவரிக்கிறது. குருவின் லட்சணம், சிவமந்திரம் சக்தி மந்திரம், சொர்ண பைரவர் மந்திரம் விளக்கப்பட்டுள்ளன. விரிவான கருத்துகள் உரையுடன் தரப்பட்டுள்ளன. சித்த மருத்துவம் பயில்வோருக்கு பயன் தரும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்