ஏசுநாதரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் கதைப்பாடல் நுால். சுவடியாகக் கிடைத்தது ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளது.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில் செறிவாக அமைந்துள்ளது. ஏசுவின் வாழ்க்கை, கதையாகவும் பாடலாகவும் தரப்பட்டுள்ளது. சுவடி பற்றிய வரலாற்றைத் தெரிவிக்கிறது. கிறிஸ்துவத்தின் விளக்கம் உள்ளது.
திருச்சபை எவ்வாறு வழிபாட்டு தொண்டு நெறிகளை செய்கிறது என்ற பொருள்களிலும் விளக்குகிறது. நிறைவாக வாழ்த்து கூறப்பட்டுள்ளது. மங்கலமாய் எல்லாரும் மகிழ்ச்சியுடன் வாழியவே என்று நிறைவடைகிறது. ஏசுநாதரின் வரலாற்றை அறிந்து கொள்ள வழி செய்கிறது. கிறிஸ்துவ மதத்தை அறிந்துகொள்ள உதவும். மதங்களைப் பற்றி ஆய்வோருக்கு பயன்படும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்