இறைவனை எழுத்துருவில் எழுந்தருளச் செய்யும் சக்கர வழிபாடு முறை பற்றிய விளக்க நுால்.
யந்திரத்தில் சக்கரத்தை வரைந்து வழிபடும் மரபு உள்ளது. அதை சிலை வடிவில் அமைப்பது மகாமேரு வழிபாடாகும். சக்தி வழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது சக்கர வழிபாடு. இந்த புத்தகம் மூன்று பகுதிகளாக 40 தலைப்புகளை கொண்டுள்ளது. முதல் பகுதி ஸ்ரீ சக்கரம் சார்பான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன.
அம்பாளை பல வகையிலும் வழிபடலாம் என விளக்குகிறது. சக்கரத்தை உருவமாகச் செய்தால் மகாமேரு எனப்படும். மகாமேருவை வழிபட்டால் ஏற்படும் பலன்களை வரிசைப்படுத்தியுள்ளது. சக்தியை வழிபடும் முறையை தெளிவாகக் கூறுகிறது. சக்தி வழிபாடு செய்வோருக்கு பயன் தரும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்