அறிவைத் தெளிவுபடுத்தி, உள்ளுணர்வின் உண்மையான உயர்வுக்கு உதாரணமாக விளங்கிய சித்தர் பெருமை பேசும் நுால். அறியாமை அகற்றும் ஆசிரியர்களாக, நோய் தீர்க்கும் மருத்துவர்களாக, அறமுரைக்கும் சான்றோர்களாக, அறிவியல் அறிஞர்களாக, பொய்மையைக் களைந்திடும் புரட்சியாளர்கள் என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.
வாழ்வை ஆன்மிக, அறிவியல் நோக்குடனும் பார்த்தவர்கள் சித்தர்கள். நல்வாழ்வுக்காகப் பல்வேறு செய்திகளை தத்துவங்களாகப் படைத்து சென்றுள்ளனர். இறை தத்துவம், உடல் உயிர் குறித்து விளக்கியுள்ள தத்துவங்கள், யோகம், நிலையாமை என ஆய்ந்து அறிமுகம் செய்கிறது.
உடல் உள்ள போதே ஆன்ம சாதனையை அடைய வேண்டும் என்று விவரிக்கிறது.
- முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்