தீண்டாமை கொடுமையை தடுக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ள சட்டங்களை அறிமுகப்படுத்தும் நுால்.
சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் நலனுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. இவற்றின் பலன்களை பெறுவதில் இடையூறுகளும் இருந்தன. பொது சமூகத்தில் புழங்கும் போது உரிய மரியாதை, நீதி கிடைப்பதிலும் சிக்கல் இருந்தது.
தலித் மற்றும் பழங்குடியினர் உரிமையை பாதுகாக்கும் வகையில், அரசுகள் சட்டங்கள் இயற்றியுள்ளன. அவற்றை சரியாக தெரிந்து பயன்படுத்த ஏதுவாக, எளிய தமிழ்நடையில் சட்டப்பிரிவுகள் தரப்பட்டுள்ளன. பின்தங்கிய மக்களின் உரிமையை பாதுகாக்க வழிகாட்டும் நுால்.
– மதி