மேலை நாடுகளில் உளவியல் தத்துவங்கள் உருவாகும் முன், மனதின் செயல்பாடுகளை அறிந்துணர்த்திய பழந்தமிழ் இலக்கியமான திருமந்திரத்தை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். நவீன உளவியல் கோட்பாடுகளுடன் பாடல் கருத்துகள் பொருத்திக் காட்டப்பட்டுள்ளன.
மனதின் செயல்பாடுகளான உணர்வு, எழுச்சி, ஊக்கம், கவனம், ஆளுமை, நடத்தை, நனவு நிலை, கனவு நிலைகளை திருமந்திரம் அறிவியல் ரீதியாக வகுத்துள்ளதை விளக்குகிறது. பொருத்தமான பாடல்களை நவீன கருத்து சார்ந்து மேற்கோளாகக் காட்டுகிறது.
மருத்துவம், கல்வி, சமூக உளவியல் கருத்துகளை தனித்தனி தலைப்புகளில் ஆராய்ந்து விளக்கியுள்ளது. திருமந்திரப் பாடல்களில் உள்ள நவீன உளவியல் சிந்தனைகளை கருத்துரைக்கும் நுால்.
– ராம்