பெண்கல்வி, பெண்ணுரிமை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். கல்விக்குழு பரிந்துரைகள், கொள்கைகள், அரசின் நடவடிக்கைகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
சங்க காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் பெண்களின் நிலை விவரிக்கப்பட்டுள்ளது.
பாலின பாகுபாடு, சமுதாய சட்டங்கள், குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, பெண்சிசு வதை, பாலியல் பலாத்காரம், பெண்ணுரிமை பற்றிய தீர்ப்புகள் தரப்பட்டு உள்ளன.
திரைப்படங்கள், பெண்களை போகப்பொருளாகக் காட்சிப்படுத்தியதை பதிவு செய்கிறது. பெண் அந்தஸ்தை உயர்த்திய இதழ்களையும் குறிப்பிடுகிறது. பெண் முன்னேற வழிவகுக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்