சந்தன வீரப்பன் தேடுதல் வேட்டையில் எளிய மக்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளையும், பாதிப்பு களையும் பதிவு செய்யும் நுால்.
வனத்தை ஒட்டிய மக்களின் இயல்பும், வாழ்வு முறைகளும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. விறுவிறுப்பான நடையில் உண்மைகளை தாங்கி நிற்கிறது. ஆய்வின் மூலம் கண்டறிந்தவற்றையும், கேட்டறிந்தவற்றையும் இயல்பு மாறாமல் தருகிறது.
எளிய மனிதர்களை விசாரணை வளையத்திற்குள் வைப்பது, தாய் முன் மகளையும், மகனையும் கொடுமைப்படுத்தி விசாரிக்கும் வன்முறை பிரயோகங்கள் மனதை கலங்கடிக்கிறது. சொற்கள் சுமந்திருக்கும் பாரம் பாறையென கனக்கின்றன. ஒரு மனிதனுக்கு அதிகாரத்தையும், ஆயுதத்தையும் அளித்துவிட்டால் கொடூர விலங்காக மாறிவிடுவதை காட்டும் நுால்.
– ஊஞ்சல் பிரபு