அமைதியான, சுக வாழ்க்கைக்கு முக்கிய தேவைகள் தானியமும், தியானமும். ஒன்று உடலுக்கு, இன்னொன்று மனதுக்கு... பிரார்த்தனையே இறைவனை இணைக்கும் பாலம். பகவானின் நாமத்திலும், ஸ்லோகத்திலும் பரிபூரணம் நிரம்பியுள்ளது. சுகம், நிம்மதி வேண்டுமென்றால் அவற்றை உச்சரிப்பதோடு அகம், புறத்தை துாய்மையாக வைத்திருக்க கூறுகிறது.
கணபதி, முருகன், சிவன், பெருமாள், அய்யப்பன், அஷ்டலட்சுமிகள், சரஸ்வதி, லட்சுமி துர்கா, ஸ்ரீராமர், ஸ்ரீ கிருஷ்ணர், நவக்கிரகங்கள், ஹனுமன், ஹயக்ரீவர், கோமாதா, நரசிம்மர் என கடவுள் மீதான தமிழ் மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்கள், இறைவன் நாமங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. இறையருள் பெற்று சுபங்களை அடைய உதவும் ஸ்லோகங்களை உடைய நுால்.
– புலவர் சு.மதியழகன்