நவீன புனைகதையாக, 1927ல் எழுதப்பட்ட நுால். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் மதிப்புரையுடன் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. அந்த காலத்தில் நிலவிய நடைமுறையை காட்சிப்பூர்வமாக சித்தரிக்கிறது.
தெய்வ பக்தி, அரச நீதி, நடுவுநிலைமை, செய்ந்நன்றி மறவாமை, துரோகம் செய்வதால் வரும் கேடு, பொய் பேசாதிருத்தல், நட்பு ஒழுக்கம் போன்ற நீதிக்கருத்துகளை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இந்த பண்புகள் சார்ந்தே கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பழைய வாழ்க்கை நடைமுறையில் அமைந்த நாவல். – ராம்