ஊக்கமும், உத்வேகமும் தரும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். எழுச்சி ஊட்டும் சிந்தனைகள் நிறைய உள்ளன.
இளம் வயதில் நெப்போலியன் பிறந்த நாட்டு படத்தை வைத்து துருப்புகளை அங்குமிங்கும் நடத்திக் கொண்டிருப்பான். இளம் வயதில் இந்திராகாந்தி பொம்மை துருப்புகளை வைத்து போர் ஒத்திகை பார்ப்பாராம். அது பின்னாளில் போர்க்களத்தில் வெற்றி பெற வழிகாட்டியதாக கூறப்பட்டுள்ளது.
இறப்புக்குப் பின் பெயர் நிலைக்கச் செய்வது இருக்கும்போது பெற்ற புகழ் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆய்வில் மும்முரமாக இருந்தவர் உணவை மறந்தது குறித்து குறிப்பிடுகிறது. அந்த அளவிற்கு சிந்தனை செலுத்தி வென்றவர் ஐசக் நியூட்டன். வாழ்க்கை உயர வழிகாட்டும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்