ஆஸ்திரேலிய எழுத்தாளர் தாமஸ் கெனியலி புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, ஸ்டீவன் சல்லியன் திரைக்கதையின் தமிழாக்க நுால். யூத அகதிகளை ஜெர்மானியர் காப்பாற்றுவதாக உள்ள கதை. இது, திரைப்படமாகவும் வெளிவந்து பாராட்டுகளை பெற்றது.
போலந்தில் கிராமத்து ரயில் நிலையத்தில் நடக்கும் பரபரப்பான காட்சிகளோடு துவங்குகிறது. திரைக்கதையில் அகதிகளின் பட்டியலோடு ஷிண்ட்லர்ஸ் வரும்போதே விறுவிறுப்பும் துவங்கி விடுகிறது. கண் முன்னே நடப்பதைப் போன்று கதைக்களம் உருவாக்கப்பட்டு, காட்சிகள் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு