குடும்பத்தில் அனைவருக்கும் உதவும் வகையிலான குறிப்புகளை உடைய தொகுப்பு நுால். சிறிய துணை தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன.
வீட்டில் எளிதாக கடைப்பிடிக்கும் மருத்துவ நடைமுறை சொல்லப்பட்டுள்ளது. அன்றாடப் பிரச்னைகளில் இருந்து விடுபட வழிகாட்டும் குறிப்புகளை தருகிறது. மன அழுத்தம் நீங்க ஆங்காங்கே தமாசு துணுக்குகளும் சொல்லப்பட்டுள்ளன.
துாங்காமல் இருந்தால் என்ன கேடு ஏற்படும் என்பதை புரிய வைக்கிறது. குளிர் சாதன பெட்டியில் மின் செலவை மிச்சப்படுத்த செய்ய வேண்டியதை எடுத்துரைக்கிறது. பாதாம் பருப்பில் அதிகளவில் கால்ஷியம் சத்து இருப்பதை எடுத்துரைக்கிறது. வாழ்வதற்கு தேவையான ஆலோசனைகளை எளிய நடையில் தந்துள்ள நுால்.
– ஒளி