வெறுப்பு மனப்பான்மையே இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிப்படை என்பதை எடுத்துக்கூறும் நுால்.
அரசியலமைப்புச் சட்டம் ஒரு சிலருக்கானது அல்ல. எல்லாருக்குமானது என வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் நாட்டை உருவாக்கி நிர்வகிக்கிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம் என்ற அமைப்புகள் கூட்டாட்சி நாடாக உணர்த்துகின்றன.
இரண்டுக்கும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. சட்டத்தின் பக்கங்களை எளிமையாகப் புரிய வைக்கிறது.
வெளிச்சத்துக்கு வராத பல அரசியல் உண்மைகளைக் கூர்ந்து நோக்கி வெளிப்படுத்தி உள்ளது. விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசியலின் போக்கையும், நோக்கையும் கூர்ந்து ஆய்வு செய்து உருவாக்கப்பட்டுள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்