பெண்கள், தங்கள் உரிமையையும், அதற்குரிய நியாயங்களையும் பேசுவதற்காக தேர்ந்தெடுத்துள்ள கலைவடிவமான நவீன நாடகங்கள் குறித்த ஆய்வு நுால். பின்தங்கிய சிந்தனையை உடைத்தெறியும் கருவியாக உள்ளதை முன் வைக்கிறது.
நவீன கருத்துக்களை பாத்திரங்கள் வழியாக வெளிப்படுத்தும் பாங்கை அடிப்படையாக கொண்டுள்ளதை ஆய்வு நிரூபிக்கிறது. பொதுவாக நவீன அரங்கத்தை மையப்படுத்திய ஆய்வு நுால்கள் குறைவாக இருக்கும் சூழலையும் எடுத்துக்காட்டுகிறது.
பெண்களின் உள்ளார்ந்த செயல்பாட்டை, வலிமையான நடவடிக்கைகளை, சிக்கலும், வலியும் நிறைந்த வாழ்வை, பாலின பாகுபாட்டால் ஏற்படும் தளர்வை சுட்டிக்காட்டுகிறது. நவீனத் தமிழ் அரங்க வரலாற்றில் பெண் மையப் பதிவுகள் குறித்து விரிவான தகவல்களை தரும் நுால்.
– ராம்