தமிழ் இலக்கணப் பார்வையை அறிவியல் ஏற்கும்படியாக செய்திகளைக் கொண்டுள்ள நுால். மொழி உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது, தமிழ் எந்த அளவுக்கு உயர்மொழியாக உள்ளது போன்ற சிந்தனைகளையும், இன்று அதற்குரிய மதிப்பு என்ன என்ற கண்ணோட்டத்தையும் ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்டுள்ளது.
அடுத்து வரும் பகுதிகளில் மொழிக்குடும்பம், மூலமொழி, தாய்மொழிக்கல்வி, ஒருமொழிக்கொள்கை, தமிழ் இலக்கணம் பற்றிய கருத்துகள் இடம் பெற்றுள்ளன.செய்யறிவுத் திறன் கணினியோடு இயையும் சூழலை அறிவியல் பார்வையில் தரப்பட்டு உள்ளது.
வருங்காலத்தில் தமிழ் மொழியியல் எவ்வாறு அமையும் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது.
– ராம.குருநாதன்