இறைவனின் அருள் வேண்டி துதிக்கப்பட்ட இஸ்லாமிய பாடல்களின் தொகுப்பு நுால். உண்மை பக்தியும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டு இறைவனிடம் கையேந்தும்போது, உடலும் உள்ளமும் இலகுவாகி, உள்ளுணர்வின் பயன் மிகுந்துவிடும்.
ஆன்மா ஆண்டவனிடம் ஒன்றுவது போன்ற மனநிலையே பக்தியின் உச்சம். அவ்வகையில் இறைவன் பெருமையையும், கருணையையும் எண்ணி எண்ணி நன்றி பெருக்கோடு படைக்கப்பட்டுள்ளது. அறிவைத் தந்தாய், ஆற்றலைக் கொடுத்தாய், பரிவைக் காட்டு, பணிந்து வாழ்வோம் என்று பக்தி பொங்குகிறது.
ஆடாமல் நிற்க வேண்டும், அமைதியுடன் தொழ வேண்டும் என அறிவுரைக்கிறது. நல்ல பெண்மணி என்ற கவிதை, மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை அற்புதமாக சொல்கிறது.
– டாக்டர் கார்முகிலோன்