தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரத்தை மீண்டும் எழுதிப் பார்த்தால் எப்படி இருக்கும் என கற்பனையாக படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். 10 கதைகளை தனித்தனியாக வாசித்தால் குறுங்கதைகளாக இருப்பதும், வரிசையில் உள்ளபடி நெடுங்கதையாகயும் விரிகிறது.
கதைகளில் பிரதாபன், பிரதிபா, தீபா என்ற மூன்று கதாபாத்திரங்கள் உலவுகின்றனர். மலை, கடல், குகை, குளிர் என இயற்கை பின்னணியாக வேறு தளத்திற்கு அழைத்துச் செல்கின்றன. வாசிப்பு எளிமையாக இருக்கிறது.
எல்லாக் கதைகளும் நேர்க்கோட்டில் பயணிப்பதால், கதாபாத்திரங்கள் மரணமும், வாழ்வை எதிர்கொள்வதும் இணையாக இருக்கிறது. புதுமையும், சுவாரசியமும் கலந்து, தனித்த அழகு உடைய நுால்.
– ஊஞ்சல் பிரபு