ஆங்கில சொற்களை உச்சரிக்க கற்றுத் தரும் நுால். சொற்களும், ஒலிக் குறியீடுகளும் தமிழ் உச்சரிப்புடன் தரப்பட்டுள்ளன.
ஆங்கில மொழியில் ஓரசையை உடைய சொற்களின் தொகுப்பாக உள்ளது. அந்த சொற்களை நினைவில் பதித்து உச்சரிக்க உரிய வழிகாட்டுதல் எளிமையாக வகுத்து தரப்பட்டுள்ளது. சொற்களை எளிதாக நினைவில் கொள்ளத்தக்க வகையில், சொல்லின் இறுதி எழுத்து அகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சொல்லுக்கு பல பொருள் இருப்பதை குறியீடு வழியாக காட்டப்பட்டுள்ளது. ஆங்கில மொழியை புரிந்து முறையாக உச்சரிக்க உரிய வழிகாட்டுதலுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவ -– மாணவியருக்கு உதவும் வகையில் சிறப்பாக உள்ளது. ஆங்கில மொழி புலமையை செம்மையாக்க உதவும் நுால்.
– ராம்