தஞ்சை பெரிய கோவிலை அமைத்த மன்னன் ராஜராஜ சோழன் பற்றிய வரலாற்று நுால். ஆட்சி சிறப்பு, நிர்வாகத்தை விரிவாகப் பதிவு செய்துள்ளது.
ஒரே காலத்தில் தந்தை, தாய், அண்ணனை இழந்தபின், அரசாட்சி பொறுப்பை ஏற்ற மன்னன் ராஜராஜனுக்கு அரசியல் சூழ்ச்சிகளுக்கிடையில் சகோதரி குந்தவை நாச்சியார் தந்த அரவணைப்பு நெகிழ வைக்கிறது.
சோழர் கால கல்வெட்டுகள், செப்பேடுகள், மெய்க்கீர்த்திகள், பட்டயங்கள் போன்றவற்றிலிருந்து திரட்டப்பட்ட குறிப்புகளிலிருந்து வரலாறுகள் புனையபட்டதைத் தெரிவிக்கிறது. போரிட்டு வென்ற ஈழ மண்டலம், வேணாடு உள்ளிட்ட பகுதிகளைச் சான்றுகளோடு குறிப்பிடுகிறது. ராஜராஜ சோழன் வரலாற்றை விரிவாக தந்துள்ள ஆவண நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு