வாழ்க்கை தேடலும், எதிர்பாராது நடக்கும் நிகழ்வுகளும் திருப்பங்களை ஏற்படுத்தும் எனக் கூறும் நாவல்.
ஆயுள் காப்பீடு முகவருக்கு திருமண நிகழ்வில் ஒரு அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் மாய அனுபவங்களில் நம்பிக்கை கொண்டு பலதரப்பட்ட மனிதர்களை சந்திப்பதுடன், இன்னொரு உலக அறிவை பெறுவதை விவரிக்கிறது.
குடும்ப அமைப்பு சார்ந்த நம்பிக்கைகளில் இருந்து வெளியேறும் மனிதனுக்கு, தண்டனை அல்லது விடுதலை கிடைப்பதை கூறுகிறது. பிரச்னைகளால் வீட்டை விட்டு வெளியேறுவோர் சந்திக்கும் சிக்கல்களை பகிர்கிறது.
பெண் சவகாசத்தால், தீராத நோயால் மரணம் அழைப்பதை எச்சரிக்கையுடன் பகிர்கிறது. நம்பிக்கை என்னவித மாற்றம் ஏற்படுத்தும் என சொல்கிறது. வட்டார வழக்கு மொழிநடை, கதாபாத்திரங்களின் குணநலன்களுடன் உள்ள நாவல்.
– டி.எஸ்.ராயன்