சாய்பாபாவின் அருளால் ஏற்பட்ட தெய்வீக அனுபவங்களை தரும் நுால். கனவில் பாபா வருவதும், அருளை பெறும் உறுதிமொழி என்பதை பல்வேறு சம்பவங்கள் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது.
பாபாவின் அருளால் எழுதிக்குவித்த கீர்த்தனைகளையும் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு கவிதையும் உள்ளார்ந்த பக்தியையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக உள்ளன. பாபாவை முதன்முதலில் தரிசித்த அனுபவமும் பரவசமுடன் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது. இறைவன் எதிர்பார்ப்பது மெய்யான பக்தியே அன்றி வேறு ஏதும் இல்லை என்பதை உரைக்கிறது. பல்வேறு சம்பவங்கள் வழி விளக்கம் தருகிறது. பாபா பக்தர்களுக்கு பொக்கிஷம்.
– டாக்டர் கார்முகிலோன்