திவ்யதேசங்களை மாவட்ட வாரியாக தரிசிக்கும் வகையிலான நுால்.
மாமல்லபுரம், திருவிடந்தை, திருநீர்மலை, திருவல்லிக்கேணி, திருநின்றவூர், திருவள்ளூர், சோளிங்கர் என சென்னை சார்ந்த கோவில் வரலாறும், அருகில் உள்ள திருத்தலம் குறித்தும் இடம் பெற்றுள்ளது.
ஏதோ போனோம் என்றில்லாமல், பெருமாளைத் தரிசித்து பாடியும் வரலாம். பாடல்களுக்கென்று தனிப்புத்தகம் தேவையில்லை. ஆழ்வார்களின் பாசுரங்களும் இருப்பதால், ஓரிடத்தில் அமர்ந்து பாடும் பேறையும் பெறலாம். பாடலின் விளக்கவுரையும் இருக்கிறது. பகவானை விட பக்தனே பெரியவன் என்ற சித்தாந்தப்படி, ஜீயர் பெருமக்களின் ஜீவசமாதிகளையும் தரிசிக்கலாம்.
– தி.செல்லப்பா