பழைய இதழ்களில் எழுதப்பட்ட படைப்புகளின் தொகுப்பு நுால். உருவகம், வசன கவிதை, வாழ்க்கைச் சித்திரம் என 28 படைப்புகள் தொகுக்கப்பட்டு அழகிய சித்திரமாக இருக்கிறது.
இரண்டு தலைமுறைக்கு முன் எழுதியதாக இருந்தபோதும் இன்றளவும் புதுமை மணம் வீசும் மலர்களாக இருக்கிறது. சிறுகதைகள் ஒவ்வொன்றும் காலத்திற்கு கட்டுப்படாமல் யதார்த்தமாக அமைந்திருப்பது தனித்துவம்.
இயல்பான உணர்ச்சிகள், அபிலாஷைகள், ஏக்கங்கள், கோபதாபங்கள், வெற்றி தோல்விகள், சமூகநீதி அவலங்கள் யாவும் இடம் பெற்று எதிரொலிக்கிறது. வாழ்க்கைச் சித்திரத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. பல கதைகளின் கதைக்களம் சென்னை திருவல்லிக்கேணி மெரினா கடற்கரையை சுற்றி அமைந்திருப்பது ரசிக்கும்படியாக உள்ளது.
– ஊஞ்சல் பிரபு