இந்தியா வல்லரசு நாடாக முன்னேற வழிகாட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். குறிப்பாக, சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இந்திய அரசியல் சட்டத்தில் செய்ய வேண்டிய திருத்தங்களை பட்டியலிட்டு, அதிலும் குறிப்பாக, எந்த பதவியிலும் யாரும் ஒரு முறைக்கு மேல் உட்காரக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆட்சி முறையில் உள்ள குறைகள், நாட்டைப் பிடித்துள்ள லஞ்ச பேய் ஆடும் ஆட்டத்தை ஒழிக்க வழிகாட்டுதல் உள்ளது.
ஜாதி, மதத்தின் பெயரால் பிறந்து கிடப்பதை ஒன்றிணைத்து, மனத்தெளிவு பெற்று, வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என வழிகாட்டுகிறது. எல்லாவற்றுக்கும் தனிமனித ஒழுக்கம் அவசியம் என்பதை நுால் குறிப்பிடத் தவறவில்லை.
– முகில்குமரன்