சிக்கலான அமைப்புள்ள மனித மூளையின் ஆற்றல்களை தொகுத்து தரும் நுால். மூளை செயல்பாட்டை மேம்படுத்த வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மூளை. நரம்பு மண்டலத்தின் தலைமையகமாக செயல்படுகிறது. உடலின் ஒவ்வொரு அசைவையும், செயலையும் தவறாது கட்டுப்படுத்துகிறது. எல்லா உயிரினங்களையும் விட திறன் அதிகமுள்ளது. எந்த சிக்கலையும் சிறப்பாக கையாளும் நுட்பம் நிறைந்தது.
அத்தகைய சிறப்புள்ள உடல் உறுப்பு பற்றி, 32 அத்தியாயங்களில் தகவல்களை தருகிறது. மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் வழிமுறைகளை உரைக்கிறது. வாழ்வின் உயர்வுக்கு மூளையின் நலம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்துகிறது. விழிப்பு ஏற்படுத்தும் வகையிலான நுால்.
– ஒளி