இதழ்களில் பல காலக்கட்டங்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். திரைப்படமான ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்த ஒருவரின் வாழ்க்கை நிகழ்வுகள் சார்ந்து படைக்கப்பட்டுள்ளன. சூழலால் ஏற்படும் இடப்பெயர்வுகள் சார்ந்து அமைந்துள்ளன. தந்தை, மகனுக்கு இடையேயான உறவு நிலை குறித்த வெளிப்பாடுகளும் கதைக்களம் கண்டுள்ளன.
நெகிழ்ச்சி நிறைந்த உள்ளடக்கங்கள் படைப்புகளில் நிறைந்துள்ளன. இதில் உலாவும் கதாபாத்திரங்களை நாளும் காணமுடியும். கதைகளுக்குள் உள்ள உரையாடல் சுருக்கமாகவும், செறிவு மிக்கதாகவும் அமைந்துள்ளன. உணர்வுகளால் நிரம்பியுள்ளன. குழப்பம் இன்றி காட்சிகள் நகர்த்தப்பட்டுள்ளன. எளிய மொழி நடையில் வாழ்வின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– ஒளி