பக்தியின் உருவகமாக வாழ்ந்த மீராவின் கதையை அழகிய நாடகமாக வடித்திருக்கும் நுால்.
மொத்தம், 23 காட்சிகளில் எளிய உரையாடலோடு நாடகம் சொல்கிறது. கதாபாத்திரங்கள், துணைப் பாத்திரங்கள் அமைந்து நேரில் பார்ப்பது போன்ற உணர்வோடு விளக்குகிறது. பக்தியின் விளக்கத்தைச் சொல்கிறது. கதையை வைத்து காட்சிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்டாளைப் போல கண்ணனை அடையும் பக்தி வைராக்கியத்தை மீரா கொண்டிருப்பதை எடுத்து கூறுகிறது. பிறப்பால் எவரும் உயர்ந்தோர் இல்லை. உயர்விற்கு காரணம் செயல் என்ற கருத்தை பரப்புகிறது. நாடகத்திற்கு உரிய உத்தி, வசனம், நிற்கும் இடம் கூறப்பட்டுள்ளது. காட்சிகளில் விறுவிறுப்பு உள்ளது. வரலாற்றை நாடகமாக்கலாம் என வழிகாட்டும் நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்