இரண்டு கதைகளை, திரைக்கதையாக கூறும் நுால். அரசியல் பிடிக்காதவர் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த செல்வந்தர். அவரை, ஜாதி சங்க மாநாட்டில் இணைத்து கட்சி துவங்கி செலவு செய்ய வைக்க துடிக்கும், அதே ஜாதியை சேர்ந்த அரசியல்வாதி. இவரின் பிடியில் செல்வந்தர் சிக்கினாரா என்பதை பகிர்கிறது. தந்தை தற்கொலைக்கு காரணம், மனநல பாதிப்பா அல்லது வேறு நிகழ்வா என திகைக்கும் மகனின் மனப்போராட்டத்தை, ‘மனக்கிணறு’ என்ற கதை அழுத்தமாக கூறுகிறது.
இரண்டையும், கதையாகவும், திரைக்கதை, வசனம், காட்சி வடிவிலும் காட்டுகிறது. எளிய நடை, வாசிப்பை சுவாரசியப்படுத்துகிறது. கதை உருமாறி திரைக்கதையாகும் நுட்பத்தையும், காட்சியாக்கும் விதத்தையும் சிறப்பாக விளக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்