குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு தொண்டு செய்த பிரமுகர்கள் பற்றி எடுத்துரைக்கும் நுால்.
நெசவுத் தொழிலில் ஈடுபட்ட செங்குந்த முதலியார் சமுதாயம் பற்றி கூறப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டத் தியாகிகள், கல்வி வணிகத்தில் அறம் வளர்த்தோர், நல்ல செயல்களை முன்னெடுத்தோர் பற்றி உள்ளது. பொறாமை, பேராசை, கோபம் தவிர்த்தோரே அறம் செய்ய தகுதி உள்ளவர் என தெரிவிக்கிறது.
ஐந்து வகையான அறச்செயல்களை முன்வைக்கிறது. குளம் வெட்டுதல், மரம் நடுதல், பாதை அமைத்தல், விளை நிலங்களை புதிதாக உருவாக்குதல், கிணறு தோண்டுதல் அவை. தண்ணீரின் முக்கியத்துவம் பற்றியும் புலப்படுத்துகிறது இந்த நுால்.
– சீத்தலைச்சாத்தன்