கவிதை வடிவில் கருத்துகளை கூறும் நுால். தமிழர்கள் வலிமை பெறும் வழியை கூறி, ஏமாளியாய் இருக்கக்கூடாது என குறிப்பிடுகிறது.
தீயைக் கொண்டு தலையை சொறிந்து தமிழர்கள் தீங்குற்றதாக சொல்கிறது. இதற்கு, தக்க விழிப்புணர்ச்சி தேவையென்கிறது. மது இல்லாத தமிழகம் பற்றி பேசுகிறது. முகமூடி அணிந்து, நடுநிலை தவறும் அரசுகளை விமர்சிக்கிறது.
ஜனநாயகப் பண்புகள் மறைந்து வருவதை காட்டுகிறது. கட்சி அரசியலால் அப்பாவித் தமிழர் ஏமாறுவதாய் சொல்கிறது. விடுதலை பெற்றதன் நோக்கம் நிறைவேறவில்லை என ஆதங்கம் கொள்கிறது. ஆட்சி முறையில் எளிமையோடு, வெளிப்படை தன்மை வேண்டும் என்பதை எளிய கவிதை நடையில் விளக்குகிறது. கவிதைப் பிரியர்களுக்கு உகந்த நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து