அரசியல் தலைவர், எம்.பி., – எம்.எல்.ஏ., போன்ற பொறுப்பு வகிப்போருக்கு நிர்வாகத்தை நடத்துவதற்கு உரிய கல்வி வழங்க அறிவுறுத்தும் நுால்.
வளர்ந்த நாட்டிற்கு நல்ல அடையாளம் தேவை. தொழில் வளம் பெருக வேண்டும். தொய்வின்றி நிர்வாகம் இயங்க வேண்டும். பொருளாதாரம் வளர வேண்டும். உற்பத்தித்திறன் பெருகி, மக்கள் வறுமை தீர வேண்டும். இவை பற்றி பதிவிட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டம் பற்றி விரிவாக விளக்குகிறது. மக்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள், புதிய கல்விக் கொள்கை, கல்வித்துறை சீர்திருத்தங்கள், ஆரோக்கியம் மற்றும் கட்டமைப்பு அம்சங்கள் பற்றிய சிந்தனையை விதைக்கிறது. நாட்டு வளர்ச்சிக்கு ஆலோசனை தரும் நுால்.
– புலவர் சு.மதியழகன்