சேமிப்பு, வீட்டுக்கடன், பங்கு முதலீடுகள், பரஸ்பர நிதி போன்ற செயல்பாடுகளில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் நுால். கேள்வி – -பதில் பாணியில் எளிய நடையில் அமைந்துள்ளது.
வங்கி வைப்புத்தொகை தொடர்பான ஐயங்களை நிவர்த்தி செய்கிறது. வைப்புத் தொகைகள் பாதுகாப்பு, சிக்கல்கள், வங்கி முடங்கினால் கிடைக்கும் அரசு காப்பீடுகளை அறிய வைக்கிறது. சேமிப்புக்கான கால அளவு, வட்டி பற்றி விளக்குகிறது.
ஓய்வு முதலீட்டு திட்டங்கள், வீட்டுக்கடன் மீதான வட்டி விதிப்பு போன்றவற்றை எடுத்துக் காட்டுகிறது. டிஜிட்டல் பணப் பரிமாற்றம், தங்க பத்திரம் மற்றும் நாணயச் சேமிப்பு, பங்குச் சந்தை முதலீடுகள் பற்றிய கருத்துகளை விளங்க வைக்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு