வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்பில் உள்ள சிற்றுார் பற்றிய ஆவண நுால். தஞ்சை மாவட்டத்தில் ஐயம்பேட்டை என்ற ஊரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் துவங்கி, நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில் முக்கிய நிகழ்வுகள் இந்த ஊரை மையப்படுத்தி நடந்துள்ளதை தெளிவுபடுத்துகிறது. மாறவர்மன் சுந்தர பாண்டியன் படையெடுப்பால், சோழர் ஆட்சி சிதைந்தது குறித்த விபரங்களை தருகிறது.
குஜராத்தை பூர்வீகமாக உடைய சவுராஷ்டிரா மக்கள் நிலை குறித்து விளக்குகிறது. ஊரைச் சுற்றிலும் உள்ள கோவில்களின் தொன்மையை ஆராய்ந்து தகவல்களை தெளிவாக தருகிறது. கல்வெட்டு, பழந்தமிழ் இலக்கிய ஆதாரங்களை முன்வைத்து எழுதப்பட்டுள்ள வரலாற்று நுால்.
– ஒளி