வாழ்வு தத்துவங்கள் அகத்தில் பதியும் வகையில் பேச்சு வழக்கில் கருத்துகளை விளக்கும் நுால். சுய பரிசோதனை செய்யும் வகையில் கருத்துகளின் அணிவகுப்பாக உள்ளது.
வாழ்க்கையை, ஆனந்தமாக அணுகுவது என்பதை மறந்து, அல்லல் தரும் போர்க்களமாய் ஆக்கியுள்ளதை உணர்த்தி திருத்திக் கொள்ள வழிகாட்டுகிறது. பொறுப்பை உணர்ந்தால் தான், சமுதாய மேம்பாட்டிற்கு உதவ முடியும் என்று நிறுவுகிறது.
அன்பின் பெருமையை பட்டியலிடுகிறது. சிறிய கதைகள் வழியாக அறிவுரைகளை தருகிறது. வாழ்வை சிறப்பாக அணுகும் முறையை அறிவுறுத்தும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்