கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறியவரின் வாழ்க்கை வரலாற்று நுால். கூலி தொழிலாளியாக பணிபுரிந்தவர் பெரும் தொழிலதிபராக முன்னேறியது குறித்து கூறப்பட்டுள்ளது.
பொதுவுடைமை கட்சியில் பதவி கிடைத்த பின்னணி தகவல், சினிமா நடிகருடன் தொடர்பு, குடும்ப சொத்துக்களை பிரித்துக் கொடுத்தது என சுய வரலாறாக உள்ளது.
தேர்தலில் வெற்றி, ஏற்றுமதி சார்ந்த தொழில் முன்னேற்றம் விளக்கமாக பேசப்பட்டுள்ளது. விவசாயத்தில் செய்த சாதனைகளும் தனி தலைப்பில் தரப்பட்டுள்ளன. வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறியதை விவரிக்கும் நுால்.
– முகில்குமரன்