கற்பனை கவிதைகளின் தொகுப்பு நுால். பலகணி என்ற தலைப்பில் 12 பாடல்கள், குறும்கவிதையாக 17 பாடல்கள் உள்ளன. இத்துடன் பிரபல கவிஞர் கலீல் ஜிப்ரான் ஆங்கில மொழியில் எழுதியவற்றில் சில தமிழாக்கம் பெற்றுள்ளன. மணல் தரையில் உதிர்ந்த இலை படம், பருவப் பெண் உதடு போல தெரிவதாக கூறியுள்ள பாடல் அருமை.
மின்மினி பூச்சிகளைப் பிடித்து சேற்றில் ஒட்டி வெளிச்சம் காட்டும் துாக்கணாங்குருவியின் திறமை விஞ்ஞானத்தை மிஞ்சும் என கவி பாடுகிறது. இயற்கைக்கு வணக்கம் சொல்கிறது. ஏன் பிறந்தோம் என்ற பதில் அளிக்க முடியாத கேள்வியை முன் வைத்தும் படைக்கப்பட்டுள்ளது. இவற்றில், ‘உச்சிக்கு வந்தால் திட்டி தீர்ப்பது சூரியனை மட்டுமல்ல; மனிதனின் வளர்ச்சியையும்’ என்பது உண்மை கவிதை.
– சீத்தலைச் சாத்தன்