ராசபாளையம் ஊர் வரலாற்றை, இளமைக்கால நினைவுகளுடன் இணைத்து இன்றைய காலம் வரை மண்பற்று நீங்காமல் பதிவு செய்துள்ள நுால்.
இளமைக்கால அனுபவங்கள், பாதித்த திரைப்படங்கள், தலைவர்கள், கலைஞர்கள் பற்றி இயல்பான நடையில் கதைபோலச் சொல்லப்பட்டுஉள்ளது. வெறும் தகவல் களஞ்சியமாக மட்டும் இன்றி சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளது.
காந்திஜி உரையாற்றிய நிகழ்ச்சி, காந்தி கலை மன்றம் தோற்றுவிக்கப் பட்டது, ராசபாளையத்தின் பெருமைக்கு எடுத்துக் காட்டாய் விளங்குவதை குறிப்பிடுகிறது.
ராசபாளையத்தின் தொன்மை வரலாறு, இயற்கைச்சூழல், கோவில்கள், அந்நியரை எதிர்த்த பாளையக்காரர்கள் பற்றிய செய்திகள், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகள் பற்றி பதிவுகள் உள்ளன. ஆவணமாகவும், கையேடாகவும் அமைந்துள்ள நுால்.
– ராம.குருநாதன்