மறைந்த கவிஞர் பிச்சமூர்த்தியின் கவிதை நயத்தை அறிமுகம் செய்யும் நுால்.
மரபையும், புதுமையையும் பிணைத்து, பழங்காலம், நிகழ்காலத்தை மனதில் வைத்து படைத்துள்ளதை கூறுகிறது. இந்திய சமூகத்தை கடந்த பார்வை உடைய படைப்பு என்கிறது. கவிதைக்குள் தத்துவம் படர்ந்து இருப்பதை எடுத்துரைக்கிறது.
பெண்களின் இயல்பான குணத்தை சித்தரித்து சுதந்திரப் போராட்டக் குரலுடன் பகிர்கிறது. காதல், காமத்தில் துவங்கினால் ஏற்படும் பின்னடைவுகளை கூறுகிறது. மீனுக்காக காத்திருக்கும் கொக்கின் இயல்பை விவரிக்கிறது. ஒரு ஆசிரியரின் கவித்துவ உரையாடலை அன்றாடப் பணியின் வெளிப்பாடாகக் காட்டுகிறது. மரணத்தை வெல்லும் மனிதன் செய்ய வேண்டியதை கூறுகிறது. உலக அரசியலை தெளிவாக எடுத்து பேசும் நுால்.
– டி.எஸ்.ராயன்