பெண் உயர்வுக்கு வழிகாட்டும் நுால். கருத்துகளை எளிமையான நடையில் அழுத்தமாகத் தந்துள்ளது.
பெண்ணின் மரபு வழி பரிமாணத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இயல்பாக காணப்படும் பலவீனங்களையும் விட்டு வைக்கவில்லை.
துணிச்சலாக வெளிப்படுத்தியுள்ளது. அழகுக்கு கொடுக்கும் அதீத முக்கியத்துவம், அதிகரிக்கும் அழகு நிலையங்கள் பற்றிய விமர்சன பார்வையும் உள்ளது.
ஆணுக்கு பெண் சமமா என்ற கேள்வி, பெண்ணுக்கு ஆண் சமமா என திருப்பிப் போடப்பட்டுள்ளது. வரதட்சணை கொடுமையின் துவக்கப் புள்ளி நுணுகி ஆராயப்பட்டுள்ளது.
தடைகளை உடைத்தாலும் பொறுப்புகளை சுமந்து தான் ஆக வேண்டும் என்ற மையக் கருத்து வெளிப்படுகிறது. பெண்கள் பற்றி ஆண்கள் எண்ணத்தில் புது வெளிச்சம் பாய்ச்சும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்