அறிவியல் கண்டுபிடிப்பின் வரலாற்றை முன்வைக்கும் நுால். ஆர்யப்பட்டர் துவங்கிய ஈர்ப்பு விசை சிந்தனை, பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பால் வளர்ந்ததை குறிப்பிடுகிறது.
பூமி தட்டை என்ற எண்ணம் தீவிரமாக இருந்த போதே, அறிஞர் ஆரியபட்டர் அது உருண்டை வடிவம் என்ற கருத்தை முன்மொழிந்த பாங்கை சுவைபட தொகுத்து வெளிப்படுத்துகிறது. புராண மரபை அலசி, தர்க்க ரீதியாக விவாதித்து அறிவியல் கருத்து எடுத்து இயம்பப்பட்டுள்ளது.
ஈர்ப்பு விசை சம்பந்தமான கருத்து வளர்ச்சி, அது தொடர்பான வரலாற்று செய்திகள் தெளிவாக தரப்பட்டுள்ளன. உரிய வரைபடங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. இது புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது. சுவாரசியம் குன்றாத அறிவியல் நுால்.
– ஒளி