இயல்பான எளிய நடையில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். சமூகத்தில் நிலவும் அவலச்சுவையை காட்சிகளாக காட்டுகிறது.
வாசிக்கும் போது அடுக்கடுக்கான காட்சி படிமங்கள் மனதில் பதிகின்றன. கண்ணில் பட்ட மனிதர்களை சித்திரங்களாக வரைந்து நிறுத்துகிறது. சொந்த ஊரில் சிறுவயதில் கண்ட முகங்களை காவியமாக்கியுள்ளது.
வாழ்வின் உன்னத தருணங்களை உள்வாங்கி, அனுபவங்களுடன் கோலமிட்டு காட்சிக்கு வைக்கிறது. பல்வேறு காலகட்டங்களில் கண்டு உணர்ந்து அனுபவித்தவற்றை வெளிப்படுத்துகிறது. சிறிய தலைப்புகளில் உள்ள கவிதைகளுக்கு பொருத்தமான படங்கள் வரையப்பட்டுள்ளன.
இவை, படைப்புகள் மீதான கவனத்தை மேலும் ஈர்க்கின்றன. இனிய படைப்புகளின் தொகுப்பு நுால்.
– ராம்