பொருள் ஆழம் நிறைந்த பழமொழிகளின் தொகுப்பு நுால். வாய்மொழியாக, வழி வழியாக வந்து சேர்ந்தவை தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழில் நீதி நுால்கள் ஏராளம் உண்டு. வாழ்மொழியாக நீதியை போதிப்பது தமிழகத்தில் பாரம்பரியமாக நிகழ்ந்து வருகிறது. அவ்வாறான பொருள் நிறைந்த பழமொழிகளை தொகுத்து உரிய விளக்கம் தருகிறது. பழந்தமிழ் பாடல்களுக்கு உரை எழுதியது போல் அமைந்துள்ளது.
ஒவ்வொரு பழமொழியும் அகர வரிசையில் அடுக்காகஅமைக்கப்பட்டுள்ளதால் எளிதில் தேர்ந்தெடுத்து வாசிக்க முடியும். ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான விளக்கம் தரப்பட்டுள்ளது. புரிந்து கொள்வதும் சுலபம்.
பழமொழியின் உட்பொருளை உணர்ந்து ரசிக்க முடிகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் வழங்கி வரும் முதுமொழி தொகுப்பாக அமைந்துள்ள நுால்.
– மதி