நடிப்பிசை புலவர் என தமிழ் சினிமா உலகில் அறியப்பட்ட கே.ஆர்.ராமசாமியின் திரைப்படப்பாடல்களின் தொகுப்பு நுால். அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரசியம் மிக்க சம்பவங்களும் தரப்பட்டுள்ளன.
குமஸ்தாவின் பெண் என்ற சினிமாவில் துவங்கி, செந்தாமரை வரை இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் இடம் பெற்ற படம், இசையமைத்தவர், இயற்றியவர், பாடியவர், நடித்தவர் என்ற பகுப்புடன் தரப்பட்டுள்ள நுால். சினிமா பாடல் பொக்கிஷமாக உள்ளது.
முழு பாடலும் தரப்பட்டுள்ளதால், இசை ஆர்வம் உடையோர் பாடுவதற்கு ஏற்றது. தமிழ் சினிமாவின் ஒரு காலக்கட்ட வரலாற்றை பதிவு செய்துள்ளது. இறுதியில், நடிப்பிசை புலவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் தொகுத்து தரப்பட்டுள்ளன.
– ஒளி