உலகில் மாற்றங்கள் ஏற்படுத்திய விஞ்ஞானிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய சுருக்க நுால். கலிலியோ துவங்கி, ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின், ஜேம்ஸ் வாட், பெஞ்சமின் பிராங்கிளின், மேரி கியூரி சாதனைகளை எளிய நடையில் தருகிறது.
ஒவ்வொரு விஞ்ஞானியின் கல்வி நிலை, வாழ்க்கை பின்னணி, அறிவியல் கண்டுபிடிப்பு தெளிவாக தரப்பட்டுள்ளது. கண்டுபிடிப்புகளின் பின்னால் உள்ள உழைப்பின் வலிமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கண்டுபிடிப்புகளை உலக மக்களுக்கு உரைத்த போது ஏற்பட்ட எதிர்ப்பு, பாதிப்புகளையும் குறிப்பிடுகிறது. விவாதம், செயல்முறை வழியாக நிரூபித்து, உலகில் மாற்றம் ஏற்பட வழிவகை செய்தது தரப்பட்டுள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானிகளை அறிய ஏதுவாக தயாரிக்கப்பட்டுள்ள நுால்.
– ஒளி