முக்குலத்தோரில் மறவர் இனத்தவர் தோற்றம், வரலாற்றை கல்வெட்டுகள் வாயிலாக ஆராய்ந்து தரும் நுால். மறவர்களில் மன்னர், படைவீரர் பலரும் இருந்ததையும் குறிப்பிடுகிறது.
பல்லவர் காலத்து மலப்புரம் கல்வெட்டு, சித்தன்னவாசல் தகவல்கள், சோழர் கால இருங்கோவேளிர், முத்தரையர், பழுவேட்டரையர் கல்வெட்டு, பாண்டியர் கால மறவர் பாடி காவல், காரண மறவர் கல்வெட்டுகளில் வரலாற்று செய்திகளை அறிய முடிகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் படைப்பற்று, அரையர், மறமாணிக்கர், மரச்சக்கரவர்த்தி, நாட்டார், நாடாழ்வார், மறமுதலியர் கல்வெட்டுகள் விளக்கப்பட்டுள்ளன. நடுகற்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. வரலாற்று ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு