அருணகிரிநாதர் அருள் பெற்று, பரிபக்குவம் உற்ற நிலையில் பாடியது. அநுபூதி நுால் விளக்க உரையுடன் உள்ளது. மனவியல் உண்மைகள் இதில் பாடப்பட்டுள்ளன. மந்திரம், தந்திரம், அதன் பிரயோகம் விளக்கப்பட்டுள்ளது.
பூதி என்றால் செல்வம்; விலையற்ற செல்வம் விபூதி; அருள் தரும் ஞானச் செல்வம் அநுபூதி. பஞ்சாட்சரமே விபூதி என வெளிப்படுத்துவதே விபூதி தியானம் என்று சொல்கிறது. மதயானை போன்ற மனதை அடக்கும் தியானத்துக்கு விளக்கம் தருகிறது.
தானத்தின் மேன்மை சொல்லும் ‘கெடுவாய் மனனே’ பாடலுக்கு விளக்கம் சொல்கிறது. முருகனை வணங்குவோருக்கு நான்கு வகை கவிதைகள் பாடும் புலமை கிடைக்கும் என்கிறது. சிந்தையில் இனிக்கும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்