சிறுவர்களுக்கு நீதி போதனை தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
ஒரே மையக் கருத்தில் மூன்று கதைகள் எளிமையான நடையில் உள்ளன. பெரியவர்கள் படித்து பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம். பொற்காசு கொடுத்து ஏமாற்றுபவனும், ஏமாறுபவனும் பாத்திரங்களாக உள்ளது ஒரு கதை. பரிசுக்காக ஏங்கியவன், ஏங்காதவன் என்ற மையக் கருத்திலும் உள்ளது.
திருவிழாவில் பொய் சொல்லி அரண்மனையில் பரிசு பெற்ற அபூர்வத்தை விவரிக்கிறது. பொய்யை எப்படி சொல்லி உண்மையாக நம்புவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. தவறான பரிசு கேட்ட சுண்டெலி பற்றிய கதை வித்தியாசமான நீதியைச் சொல்கிறது. தன்மானம் இழக்கக்கூடாது என சொல்லும், ‘தண்ணீர்’ கதை படிப்பினை தருகிறது. படிக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலை சாத்தன்