சங்க இலக்கியங்களில் ஒன்றான நெடுநல்வாடை பதிப்பு வரலாற்றை கூறும் நுால். நக்கீரரால் ஆசிரியப்பாவில், 188 அடிகளில் பாடப்பட்டுள்ள இந்த நுாலுக்கு தெளிவான பதிப்பு வரலாறாக உருவாகியுள்ளது.
இந்த புத்தகத்தில் உ.வே.சாமிநாதய்யர் பதிப்பித்தது துவங்கி, 44 பதிப்புகள் பற்றிய விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை எட்டு வகையாக முறைப்படுத்தி விபரங்களை தருகிறது. இறுதியில் துணை நுால் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
பழந்தமிழ் இலக்கியமான நெடுநல்வாடையை, உரை அமைப்பில் கால வரிசைப்படி ஆய்வு செய்வோருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பதிப்புகள் எப்படி வெளியிடப்பட்டன என்ற விபரமும் விரிவாக தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
– ராம்